Skip to main content

Posts

பொறம்போக்கு

வணக்கம் நான் உங்கள் நண்ப(ன்)ர்  சுரேஷ் . புதிய தமிழல்லாத சொற்கள் பற்றிய அறிஞர் நற்றவன் நூலை நேற்று முதல் படிக்கலானேன்.  அதன் எதிர் விளைவாக நம்மிடையே புழக்கத்தில் இர...

தென்கச்சி கோ.சுவாமிநாதன்

நான் மூன்றாம் வகுப்பு  படிக்கின்ற காலகட்டத்தில் தெருவுக்கு இரண்டொரு வீட்டிலும் ,  டீக்கடையிலும் மட்டுமே வானொலி இருக்கும். அப்போது காலை வேளையில் ஒருவரின் பேச்சை...

மல்லிகையே மல்லிகையே

இரண்டு பேர் சண்டை போட்டுக் கொள்கிறார்கள் என்றால், அவர்களை நாம் விலக்கிவிட  முயலும் போது நமக்கும் கொஞ்சம் அடி விழத்தான் செய்யும்.  ஆனால் எதிரெதிரே இருக்கக்கூடிய  ...

பைய பைய

அனைவருக்கு இனிய வணக்கம். அடியேன்  இரண்டொரு நாட்களுக்கு முன்னர்  ஔவையாரின் கொன்றை வேந்தன் நூலை மறுபடியும் படிக்க நேரிட்டது. அலைபேசியில்  வெற்றிலையில்  சுண்ணாம்ப...

வரலாறு பற்றி அதிகம் எமக்கு தெரியாவிட்டாலும், அதை அறிந்துகொள்ளவும், அதை மற்றவருக்கு தெரியப்படுத்தவும் அதிக ஆர்வமுண்டு. என்னுடைய பாட்டனார் ராஜகோபால் கொண்டியார் அதிக வரலாற்று நூல்களையே படிப்பார் அதைப் பார்த்து வளர்ந்த எனக்கு அந்த ஆர்வம் வந்துவிட்டது. எங்கள் ஊர் பெயர் சுத்தவல்லி சதூர்வேதிமங்கலம் ஆகும்.பிற்கால அதாவது முதலாம் இராஜேந்திர சோழனுக்கு பிறகான சோழப்பட்டத்தரசிகளில் ஒருவர் அது காலப்போக்கில் சுத்தமல்லி என ஆகிவிட்டது. எங்கள் ஊரில் ஒரு வரதராஜ பெருமாள் கோவில் ஒன்றுண்டு, கேட்பாரற்று ஒரே ஒரு பூட்டை மட்டுமே காவலாக கொண்டு இருந்த அந்தக் கோவிலில் பல ஆண்டுகளுக்கு முன் சிலைகடத்தல் மன்னன் கபூர் பல சிலைகளை கடத்திவிட்டான். அவன் மியூசத்தில் வைத்திருந்த அந்த சிலைகள் நூறு கோடி வரை ஏலம் போயிருக்கிறது, ஆனால் வாங்குபவர்களுக்கு ஒரு தயக்கம், அந்தச்சிலையின் அடிபீடத்தில் சுத்தவல்லி என்ற பெயர் இருப்பதுதான். எவ்வாறோ கபூரும் பிடிபட்டான்! எங்கள் ஊர் சிலைகளும், ஹீபராந்தக சதூர்வேதி மங்கலம் என்கிற திருப்புரந்தான் விநாயகர் சிலை உள்ளிட்ட அனைத்து சிலைகளும் சில தன்னார்வலர்களின் முயற்சியால் மீட்கப்பட்டு பிரதமர் மூலம் இந்தியா வந்தடைந்தனர். எங்கிருக்கிறார்கள் என தெரியவில்லை. ( எனக்கு மூன்று ஆண்டுகள் முன்பே தெரியும் ) இப்படியான எங்கள் ஊர் சுத்தவல்லியில் திருவிழாக்களின் போது சில வகையறா என்கிற தலைக்கட்டு அதாவது குழுப்பெயரில் மண்டகப்படி நடத்துவர். அருள்மிகு காளியம்மன் சாமிக்கு நகை போடுவது ஒரு வகையறா, பூ அலங்காரம் சூடுவது, சாமிசிலை ஏற்பது, சாமியை தாங்கி பிடிப்பது, திருக்குடை பிடிப்பது எல்லைக்கிடா வெட்டுவது என ஒவ்வொரு வகையறாக்களுக்கும் ஒதுக்கப்படும். அந்த கோர்ட் உத்தரவுப்படியான ஆவணம் என் பாட்டனார் கைவசம் இருபது ஆண்டுகள் இருந்தது. இப்படியான ஒரு வகையறா பாலதரியன், அவர்களின் உண்மையான பட்டப்பெயர் அடியேன் ஆய்ந்த அளவில் சொல்கிறேன் " பல்லவர் திரையோன் " அடுத்து சம்பன் வகையறா , மகோன்னதமான சோழ வரலாற்றின் இடத்தை பிடித்த குறுநில மன்னர்களான. "சம்புவராயர்கள் வகையறா " அடுத்து "சீப்பிலி வகையறா " சீட்புலியார் குறுநில மன்னர் வகையறா " நான் சார்ந்த "கொண்டி" வகையறா, என்பது கொண்டியார் என்ற குறுநில மன்னரின் பட்டப்பெயராகும். _____வரலாறு நீளும். சுரேஷ்மணியன் MA,

கொண்டியார் வகையறா

பழமொழி

நான் "ஆல் "ன்னு சொன்னா, இவன் "பூல் "ன்னு சொல்றான்ய்யா  .    இது மிகச்சிலரால் அல்லது பயன்பாட்டிலோ இல்லாத பழமொழியாகும். இது ஆபாசமான பழமொழியன்று,  பழமொழி என்பது அனுபவத்தின் வாயிலாக மாந்தரின் உணர்ச்சி வெளியீட்டு கருவியாக வெளிப்படுத்துவது ஆகும்.  ஆனாலும் இந்த பழமொழிகள் பயன்படுத்தும், பிறரிடம்  கூறும் போக்கு நம்மவரிடையே நாளுக்கு நாள் அருகிவருகின்றது என்பது சற்றேறழத்தாழ நிதர்சனமான உண்மையும் கூட.   வயதான கிராமத்துவாசிகளிடம் நாம் பேச்சு கொடுத்தோமேயானால் பேச்சினூடே அவர்களின் வாழ்வியலில் கண்டறிந்த, கேட்டறிந்த பழமொழிகள் எண்ணெய் தோய்த்து போட்ட பாப்கார்ன் சோளமாய் வெடித்துச்சிதறும்  .    வேலையே செய்ய திறமில்லாத ஒரு நபரின் வலிவை விளக்க  " அருக்க மாட்டாதவன் சூத்துல அய்ம்பத்தெட்டு அருவாளாம் " என்றும்,  ஒரே நபருக்கு ஒரே சமயத்தில் பல வேலையிருக்குமாயின்     " ஊருக்கு ஒரு தேவுடியா, அவ யாருக்குன்னுதான் ஆடுவாளாம் " என்ற வகையில் சொலவடைகள் சுவைமிகுந்ததாக இருக்கும்.    பழமொழிகள் வட்டாரம் சார்ந்த வழக்கு மொழியினதாகவும் இருக...

திண்ணை

காணாமல் போன திண்ணை. அனைவருக்கும் இனிமையான வணக்கம். இன்றை நவநாகரீக தமிழரின் வாழ்வியல் பயன்பாட்டிலும், அடித்தட்டு சமூக மக்களின்,  கிராமிய வாழ்க்கை பயன்பாட்டிலும் அவர்களாகவே வலிந்து தொலைத்துக் கொண்டிருப்பது " திண்ணை " என்றுதான் சொல்ல வேண்டும். காணாமல் போன தமிழரின் கருவிகளாக  முதன்மையானதாக - அம்மிக்கல்லையும் - மாவு அரைக்கும் குடைக்கல்லையும் -உரலையும் உலக்கையையும் சேர்த்துக்கொள்ளலாம். அரிதினும் அரிதாய் மேற்சொன்ன அடுதலுக்கு ( சமையல் செய்ய உதவிய பொருள்கள் ) பயன்பட்ட பொருள்களை சில கிராமங்களில் பயன்பாட்டில் இருப்பதை காணும் போது ஓர் இனம் புரியாத மகிழ்ச்சியும், பெருமிதமும் தோன்றும். அத்தகைய காணாமல் போன பட்டியலில் நம்மவர்கள் திண்ணையையும் சேர்த்துவிட்டார்கள். `` திண்ணை " இது தமிழரின் வீட்டின் முன்பகுதியில் நிலைக்கதவு எனும் வாசற்படியின் நடைபாதையின் இருமருங்கிலும் ஒன்றரை அடி முதல் உயரம் கொண்டதாய் அமைக்கப்பட்டிருக்கும். திண்ணை பள்ளிக்கூடம், திண்ணைப்பேச்சு, திண்ணையிலே கிடந்தவனுக்கு திடுக்குன்னு வந்துதான் வாழ்க்கை எனும் சொற்கள், சொலவடைகள்  வழி திண்ணையின் பயன்பாட்ட...