Skip to main content

அவ்வையாரின் ஆத்திச்சூடியும் பாரதியின் புதிய ஆத்திச்சூடியும் s

அறம் செய விரும்பு 
ஆறுவது சினம் 
இயல்வது கரவேல் 
ஈவது  விளக்கேல் 
உடையது விளம்பேல் 
ஊக்கமது கைவிடேல் 
எண்ணெழுத்து இகழேல் 

இப்படியாக அவ்வையாரின் ஆத்திச்சூடியை, எமது ஊரான  சுத்தமல்லி  தொடக்கப்பள்ளி வகுப்புகளில் மதிய சத்துணவுக்கு பின் ஒரு வித தூக்கம் கலந்த ஆயாசத்தோடு  " கூட்டத்தோடு சேர்ந்து கோவிந்தா " போட்ட அந்த நந்தவன நாட்கள் இன்னும் மனதை விட்டு அகலாமல் பசுமரத்தாணி போல் ஆழ பதிந்துள்ளது. 

ஆனாலும் " அறம் செய விரும்பு " 
எனும் வரிக்கு அடுத்துவரும் வரிகள் எல்லாம் அவ்வை பாட்டி கட்டளைத்தொனியில் ( Order)  கூறுவது போல இருக்கும். ஆனால் முதல் வரி " அறம் செய் " என்று இல்லாமல் " அறம் செய விரும்பு " எனும் வேண்டுகோள் தொனியில் ( Request)  காணப்படுகிறதே இதன் பிண்ணனி என்னவென்று ஆராய்ந்து பார்த்தால் அங்கேயும் ஒரு வியப்பும், நேர்த்தியும் மேலோங்கி நிற்கிறது.  அறம் என்பது தர்மம் அல்லது நீதி அல்லது உலகத்து உயிர்களுக்கெல்லாம் நீ செய்யக்கூடிய எந்தவொரு காரியம் நன்மை அளிக்குமோ அது அறம் என்று பொருள் கொள்ளலாம். உணவு இல்லாமல் கஷ்டத்தில் இருக்கும் ஒரு ஏழைக்கு ஒரு பணக்காரன் உணவோ அல்லது பணமோ கொடுத்து உதவிடவோ  முடியும் அது அறம். ஆனால் அவனைப் போன்ற ஒரு ஏழை மற்றொரு ஏழைக்கு எவ்வாறு அறம் செய்ய முடியும் ?  அதனால்தான் அவ்வைப்பாட்டி அறம் செய் என்று கூறாமல் " அறம் செய விரும்பு " அதாவது உன்னால் மற்றவருக்கு உதவ முடியாவிட்டாலும் மனதால் நினைத்தாலோ, விரும்பினாலே போதும் அதுவே அறம் என்கிறாள் அந்த கிழட்டு தமிழச்சி.  

#நல்லது_ஆற்றீராயினும்_அல்லதுசெய்தல்_ஓம்புமின்.

அன்போடு,
சுத்தமல்லி:  சுரேஷ்மணியன் M. A

Comments

Popular posts from this blog

படித்தேன் அது படி தேன்.

சிந்தை சூழ் கம்பன் கம்பனை எனக்குள் ஆழ வேரூன்ற வைத்த இடம் தத்தனூர்  MR கல்லூரியும், தத்தனூர் மேலூர் கிளை நூலகமும்  ஆகும். கம்பன் என்றாலே எனக்குக் குற்றால நீர்வீழ்ச்சியாய் உள்ளம் பூரித்துப் போகிறது, வார்த்தைகள் விக்கித்து நிற்கின்றன.  என்னவென்று சொல்வேன், ஏதென்று சொல்வேன் அவன் காவியப் புகழை.  நெய்தலுக்கும், பாலைக்கும், மருதத்துக்கும், முல்லைக்கும் மேலாக உச்சியில் இருக்கும் குறிஞ்சி நிலத்தின் உச்சியில் வானோடு கைகோர்த்து, மதியோடும், கதிரோடும் தோழமை பேசும் உச்சி மலையில் விளைந்த கற்பகமரம் அவன். கண்ணதாசன் கம்பரின் ஆற்றலைப் புகழும் போது, "  பத்தாயிரம் கவிதை முத்தாக அள்ளிவைத்த சத்தான கம்பனுக்கு ஈடு - இன்னும் வித்தாக வில்லையென்று பாடு! சீதை நடையழகும் ஸ்ரீராமன் தோளழகும் போதை நிறைந்ததெனச் சொல்லி - எனைப் போட்டான் மதுக்குடத்தில் அள்ளி! அண்ணனொடு தம்பியர்கள் நாலாகி ஐந்தாகி ஆறேழு ஆனவிதம் கூறி - எனை ஆளுகிறான் மூளைதனில் ஏறி!  " என்று புகழ்ந்து பாடுவார். அத்தகைய வளமிக்க கற்பனைக்கும், கருத்துக்கும் உரித்தானவர் கம்பர் என்றால் அது மிகைஅன்று. அயோத்தியை வி...

கம்பனின் கவித்திறம்.

தமிழின்பால் மிகுந்த ஈடுபாட்டை என்னுள் புகுத்தியது கரிசல் எழுத்தாளர் கி. ராஜநாராயணன் அவர்களின் சாகித்திய அகாடமி விருது பெற்ற நாவலான " கோபல்ல கிராமம்,  கோபல்ல கிராமத்து மக்கள், " எனும் இரு  நாவல்களை நான் பன்னிரண்டு வயதில் படித்து முடித்தேன் அதன் பிறகு நாவல்கள் மீது தணியாத ஆர்வம்.  பிறகு பத்தாம் வகுப்பு பயின்ற காலத்தில் தலைவர் கலைஞர் பற்றிய கவிதை நூலொன்றை எதேச்சையாக படிக்க நேர்ந்தது அந்நூலின் கீழ்கண்ட வரிகள் ஆழ்மனதின் அடிவாரத்தில் சிலந்தி வலையாய் பின்னிக்கொண்டது  இதோ !   அந்த வரிகள் . " தண்டவாளத்தில் நீ தலை வைத்து படுத்ததால்தான் தலைவா ! இன்று தமிழ் நிமிர்ந்து நிற்கிறது. மேலும், அதில் பாரதி பற்றிய கவிதையும் படித்தேன் " இவன் வெள்ளை யானைகளோடு போராடிய போது வீழ்ந்ததில்லை கறுப்பு யானையோடு கைகுலுக்கிய போதுதான் காணாமல் போனான். இவ்வாறான கவிதை வரிகள் என்னுள் கிளர்ச்சியை ஏற்படுத்தின ஆனால் நான் கல்லூரியில் போய் சேர்ந்தது பி.காம் பாடப்பிரிவு ,  அங்கு அக்கவுண்ட்ஸ்,  ஆடிட்டிங்,  பேங்கிங் இது போன்ற தாள்களின் தன்மைகளை பேராசிரியர்கள் விள...

அனிச்சம்

தமிழ் பேசும் உறவுகளுக்கு இனிய காலை/ மதியம் /மாலை /இரவு வணக்கம் ( படிக்கும் நேரத்திற்கேற்ப பொழுதை சேர்த்துப் படிக்கவும்). ""அழகாய் இருப்பவை எல்லாம்  உன்னை நினைவுபடுத்துகின்றன உன்னை நினைவுபடுத்துபவை எல்லாம் அழகாக இருக்கின்றன'' என்ற காதல் கவி தபுசங்கரின் வரிகளைப் போல,                         "" படித்தற்குரியதெல்லாம் ரசனைக்குரியதாய் இருக்கிறது  ரசனைக்குரியதெல்லாம் படித்தற்குரியதாய் '' இருக்கிறது என்பேன் நான் .     அகநூலோ,  புறநூலோ,  அகப்புற நூலோ,  -நீதிநூலோ எவ்வித நூலாயினும் வாழ்வியல் கருத்து நெறிகளைத்தாண்டி இலக்கிய இன்பம் பயக்குகின்ற, இலக்கிய ரசனை தருகின்ற கருத்தமைந்த வரிகள் கண்டிப்பாக இடம் பெற்றிருக்கும், இது திண்ணம்.            ஆனால் இன்றைய தமிழிலக்கிய மாணவர்களுக்கான  கல்வி முறையில் ரசனை, அழகியல் என்பதை இலக்கியங்களின் துணைக் கொண்டு கற்பிக்கப்படவில்லை, அது போன்ற பாடத்திட்டங்களும் அமைக்கப்படவில்லை ,அப்படியே பாடத்திட்டம் அமைக்கப்பட்டிருந்தாலும், தக்காரா...