Skip to main content

சுத்தமல்லி,புளியங்குழி


அரியலூரில் இருந்து தென்கிழக்கே 22 கி மீ தொலைவில் உள்ள ஊர் ஜெ.சுத்தமல்லி. அங்கிருந்து 6 கீ மீ தெற்கே சுத்தமல்லி ஊராட்சிக்குட்பட்ட ஓர் அழகிய சிற்றூர் புளியங்குழி .இவ்வூர்  நிலவமைப்பு செம்மண் நிறைந்த, முந்திரி காடுகள் சூழ்ந்த பகுதியாகும். இங்கிருந்து 7 கி மீ தொலைவில் வற்றாது வளங்கொழித்து ஓடுகிறது கொள்ளிடம் என்கிற பொன்னி நதி.  ஆனாலும் இந்த ஊர் மேடான சிவந்த சரளைக் கற்கள் கொண்ட மேட்டுப்பகுதி என்பதால், முற்காலங்களில் வானம் பார்த்த பூமியாக மானாவாரி பயிர்களே விளைந்தது. வளர்ந்து விஞ்ஞான அறிவியல் கருவிகளின் வரவால் ஆழ்துளைக் கிணறுகள் அமைக்கப்பட்டு மின் மோட்டார் உதவியால் சுத்தமல்லி கிராமத்தை சுற்றியுள்ள அனைத்து கிராமங்களும் விவசாயத்தில் ஆழ்ந்த உழைப்பை செலுத்துகின்றனர். முற்காலத்தில் அரியலூர் என்றால் எவ்வாறு கொத்தமல்லி பிரபலமோ ,அதே போல் சுத்தமல்லியும் ஒரு காலத்தில் கொத்தமல்லிக்கு பிரபலம்.  
கரிசல்மண் நிறைந்த பகுதியில்தான் இப்பயிர் அமோகமாக விளையும்.  சுத்தமல்லி, புளியங்குழி, ஆலவாய், உல்லியக்குடி, கோரைக்குழி, இன்ன பிற சுற்றுவட்டார ஊர்களில் செம்மண் மிகுந்து காணப்படுவதால் முந்திரிக்காடுகளும் அதிகம்.
அதே போல் இன்றைய நாட்களில், கடலை, முருங்கை,காய்கனிகள்  மிகுதியான அளவில் விளைவிக்கப்படுவதால்  வியாபாரிகளால் கொள்முதல் செய்யப்பட்டு ஏற்றுமதியும்  செய்யப்படுகிறது .

புளியங்குழி 

நம்மில் அநேகம் பேர் மற்றவர் கூறினார் என்பதற்காக அந்த வார்த்தையை, பெயரை வழி வழியாக பேசி வருகிறோம். அந்த சொல்லின் பொருள் என்ன?  ஏன் அப்படி அழைத்தார்கள்? அழைக்க காரணம் என்ன.?  என்று யோசிப்பதில்லை.  நம்மில் அநேகருடைய பெயர் கண்டிப்பாக தமிழில் இல்லை.  ஏழை வீட்டு கத்தரிக்காய் குழம்பில் எங்கோ ஒன்றிரண்டு காணப்படும் காய்த்துண்டுகளைப் போல தமிழ் பெயர்கள் காணலாகிறது. ஊர்ப் பெயரும் அவ்வாறே. ஆரியர்களாலும், ஆங்கிலேயர்களாலும், நம்மவர்களாலும் சிதைக்கப்பட்டன,மாற்றமாயின. புளி+அம் +குழி =புளியங்குழி 
புளிய மரங்கள் சூழ்ந்த அழகிய ,இனிய நீர்நிலை குழி எனலாம் 

படத்தில் காட்டப்பட்டுள்ள 
இரண்டாவதுநீர்நிலைதான் பதினைந்து ஆண்டுக்கு முன்வரை குடிநீராக பயன்படுத்தப் பட்டுள்ளது.  இவ்வூர் தோன்றிய நாள் முதல் இன்றுவரை அந்த நீர்நிலையை சுற்றி புளிய மரங்கள் சூழ்ந்து காணப்படுகிறது..... 

Comments

Popular posts from this blog

படித்தேன் அது படி தேன்.

சிந்தை சூழ் கம்பன் கம்பனை எனக்குள் ஆழ வேரூன்ற வைத்த இடம் தத்தனூர்  MR கல்லூரியும், தத்தனூர் மேலூர் கிளை நூலகமும்  ஆகும். கம்பன் என்றாலே எனக்குக் குற்றால நீர்வீழ்ச்சியாய் உள்ளம் பூரித்துப் போகிறது, வார்த்தைகள் விக்கித்து நிற்கின்றன.  என்னவென்று சொல்வேன், ஏதென்று சொல்வேன் அவன் காவியப் புகழை.  நெய்தலுக்கும், பாலைக்கும், மருதத்துக்கும், முல்லைக்கும் மேலாக உச்சியில் இருக்கும் குறிஞ்சி நிலத்தின் உச்சியில் வானோடு கைகோர்த்து, மதியோடும், கதிரோடும் தோழமை பேசும் உச்சி மலையில் விளைந்த கற்பகமரம் அவன். கண்ணதாசன் கம்பரின் ஆற்றலைப் புகழும் போது, "  பத்தாயிரம் கவிதை முத்தாக அள்ளிவைத்த சத்தான கம்பனுக்கு ஈடு - இன்னும் வித்தாக வில்லையென்று பாடு! சீதை நடையழகும் ஸ்ரீராமன் தோளழகும் போதை நிறைந்ததெனச் சொல்லி - எனைப் போட்டான் மதுக்குடத்தில் அள்ளி! அண்ணனொடு தம்பியர்கள் நாலாகி ஐந்தாகி ஆறேழு ஆனவிதம் கூறி - எனை ஆளுகிறான் மூளைதனில் ஏறி!  " என்று புகழ்ந்து பாடுவார். அத்தகைய வளமிக்க கற்பனைக்கும், கருத்துக்கும் உரித்தானவர் கம்பர் என்றால் அது மிகைஅன்று. அயோத்தியை வி...

கம்பனின் கவித்திறம்.

தமிழின்பால் மிகுந்த ஈடுபாட்டை என்னுள் புகுத்தியது கரிசல் எழுத்தாளர் கி. ராஜநாராயணன் அவர்களின் சாகித்திய அகாடமி விருது பெற்ற நாவலான " கோபல்ல கிராமம்,  கோபல்ல கிராமத்து மக்கள், " எனும் இரு  நாவல்களை நான் பன்னிரண்டு வயதில் படித்து முடித்தேன் அதன் பிறகு நாவல்கள் மீது தணியாத ஆர்வம்.  பிறகு பத்தாம் வகுப்பு பயின்ற காலத்தில் தலைவர் கலைஞர் பற்றிய கவிதை நூலொன்றை எதேச்சையாக படிக்க நேர்ந்தது அந்நூலின் கீழ்கண்ட வரிகள் ஆழ்மனதின் அடிவாரத்தில் சிலந்தி வலையாய் பின்னிக்கொண்டது  இதோ !   அந்த வரிகள் . " தண்டவாளத்தில் நீ தலை வைத்து படுத்ததால்தான் தலைவா ! இன்று தமிழ் நிமிர்ந்து நிற்கிறது. மேலும், அதில் பாரதி பற்றிய கவிதையும் படித்தேன் " இவன் வெள்ளை யானைகளோடு போராடிய போது வீழ்ந்ததில்லை கறுப்பு யானையோடு கைகுலுக்கிய போதுதான் காணாமல் போனான். இவ்வாறான கவிதை வரிகள் என்னுள் கிளர்ச்சியை ஏற்படுத்தின ஆனால் நான் கல்லூரியில் போய் சேர்ந்தது பி.காம் பாடப்பிரிவு ,  அங்கு அக்கவுண்ட்ஸ்,  ஆடிட்டிங்,  பேங்கிங் இது போன்ற தாள்களின் தன்மைகளை பேராசிரியர்கள் விள...

அம்பிகாபதி

தந்தை மகற்கு ஆற்றிய உதவி : உலக இலக்கியங்கள் வழி நாம் அறியும் உன்னதமான காதல் ஜோடிகள் ரோமியோ ஜூலியட் லைலா மஜ்னு  இவ்வாறான இன்ன பிறர். ஆனால் தமிழின் தனிப்பாடல்கள் வழியாக நம் பாட்டன் கம்பருக்கு அம்பிகாபதி என்ற மகன் இருந்ததாகவும், அவன் சோழ மன்னனின் மகளான இளவரசி அமராவதியை காதல் செய்ததாகவும், அந்தக் காதலே அவன் ஆவி பறிபோவதற்கு காரணமாகவும் இருந்ததாகவும் அறிய முடிகிறது . அறிஞர் பெருமக்கள் கம்பருக்கு மகன் இருந்து அவன் சோழ மன்னனால் கொல்லப்பட்டான் என்பதற்கான ஆதாரங்களை, தரவுகளை, யூகங்களை கம்பராமாயணத்தின் வழி விளக்க முயற்சித்துள்ளனர்.  அதாவது ராமனை பிரிந்த தசரதனின் அழுகைக்கும், இந்திரஜித் மாண்ட போது ராவணின் அழுகைக்கும் இடையே நிரம்ப வித்தியாசம் காணப்படுகிறது.  ராவணன் அழும் போது கம்பனே ராவணணாக மாறி அழுவது போன்ற துன்பியல் உணர்வைக் காண முடிகின்றது என்பர். கல்லூரியில் நான் தமிழிலக்கியம் பயில ஆரம்பித்த தொடக்க காலத்தில் எம் ஊரான  "சுத்தமல்லி " யை சேர்ந்த திருச்சி தேசிய கல்லூரியில் இயற்பியல் பயின்ற, இன்றும் அதிமுக வில் பொறுப்பு வகிக்கும் என் உறவுமுறை மாமனான முருகன் அவர்கள் முதன் ...