Skip to main content

Posts

Showing posts from January, 2022

சுத்தமல்லி,புளியங்குழி

அரியலூரில் இருந்து தென்கிழக்கே 22 கி மீ தொலைவில் உள்ள ஊர் ஜெ.சுத்தமல்லி. அங்கிருந்து 6 கீ மீ தெற்கே சுத்தமல்லி ஊராட்சிக்குட்பட்ட ஓர் அழகிய சிற்றூர் புளியங்குழி .இவ்வூர்  நிலவமைப்பு செம்மண் நிறைந்த, முந்திரி காடுகள் சூழ்ந்த பகுதியாகும். இங்கிருந்து 7 கி மீ தொலைவில் வற்றாது வளங்கொழித்து ஓடுகிறது கொள்ளிடம் என்கிற பொன்னி நதி.  ஆனாலும் இந்த ஊர் மேடான சிவந்த சரளைக் கற்கள் கொண்ட மேட்டுப்பகுதி என்பதால், முற்காலங்களில் வானம் பார்த்த பூமியாக மானாவாரி பயிர்களே விளைந்தது. வளர்ந்து விஞ்ஞான அறிவியல் கருவிகளின் வரவால் ஆழ்துளைக் கிணறுகள் அமைக்கப்பட்டு மின் மோட்டார் உதவியால் சுத்தமல்லி கிராமத்தை சுற்றியுள்ள அனைத்து கிராமங்களும் விவசாயத்தில் ஆழ்ந்த உழைப்பை செலுத்துகின்றனர். முற்காலத்தில் அரியலூர் என்றால் எவ்வாறு கொத்தமல்லி பிரபலமோ ,அதே போல் சுத்தமல்லியும் ஒரு காலத்தில் கொத்தமல்லிக்கு பிரபலம்.   கரிசல்மண் நிறைந்த பகுதியில்தான் இப்பயிர் அமோகமாக விளையும்.  சுத்தமல்லி, புளியங்குழி, ஆலவாய், உல்லியக்குடி, கோரைக்குழி, இன்ன பிற சுற்றுவட்டார ஊர்களில் செம்மண் மிகுந்து காணப்படுவதால் முந்திரிக்காடுகளும் அதிகம். அதே

ஆலம்பள்ளம்

 எங்கள் ஊர் சுத்தமல்லி அருகில் உள்ள ஒரு குக்கிராமத்தின் பெயர் ஆலம்பள்ளம். பொதுவாக அந்த ஊருக்கு உள் நுழையும் முன் மிக சரிவான பள்ளத்தில் இறங்குவது போன்ற நிலவியல் அமைப்பு இன்றும் இருக்கிறது. ஒரு வேளை ஆள் உயர பள்ளம் (அ)ஆல் உயர பள்ளம் அதாவது ஆலமர உயர அளவு பள்ளம் என்பதே இவை மருவி ஆலம்பள்ளம் என வந்திருக்கலாம் எனக் கருதுகிறேன்.  --------+-சுரேஷ் மணியன் M.A,