Skip to main content

நீர்நிலைகளின் பெயர்காரணங்கள்


நீர்நிலைகளின் பெயர்காரணங்கள். 

குளம் (குளிப்பதற்காக அமைக்கப்பட்டவை)

ஏரி (ஏர் தொழிலுக்காக {பயிர்ச் செய்கை) அமைக்கப்பட்டவை)

ஊருணி (ஊரார் உண்ணுவதற்காக {சுத்தமான குடிநீர்த் தேவைக்காக)

பொய்கை (மலர் நிறைந்த நீர் நிலை)

மடு

கேணி (ஆலயங்களுக்கு அருகாமையில் அமைந்த நீர் நிலை)

மோட்டை

அள்ளல்

கிணறு
துரவு (தோட்டஞ் செய்வதற்காககத் தோண்டப்பட்டவை)

தடாகம் அல்லது வாவி

ஓடை

அளக்கர் (அளக்க முடியாத நீர் நிலை- கடல்)

அசம்பு (உள்நாட்டில் காணப்படும் கழிமுகம் அல்லாத நீர்கோர்த்த களிமண் நிறைந்த சேற்று நிலம் )

அள்ளல் (சேறு பொருந்திய நீர் பள்ளம்)

அகழி - கோட்டைக்கு வெளியே அகழ்ந்து அமைக்கப்பட்ட நீர் அரண்.(ஆழமான நீர் கொண்ட பாதுகாப்பான இடம்)

அயம் - அருவி கொட்டுமிடத்தில் பொங்கிக்கொண்டிருக்கும் நீர்நிலை

ஆழிக்கிணறு (தற்போது இது நாழிக்கிணறு என்று அறியப்படுகிறது) - கடலருகே தோண்டி கட்டிய கிணறு.

 தமிழகத்தின் திருசெந்தூரில் இவ்வாறான நீர் நிலை தற்போதும் உள்ளது.

இலஞ்சி - பலவகையான பயன்பாட்டிற்காக தேக்கப்படும் நீர்.

கயம் - சமவெளியில் ஆறு பாய்ந்து நிரம்பும் நீர்நிலை.

கழி - உப்பங்கழி, கடல்நீர் பாய்ந்து தேங்கிய நீர்நிலை.

சுனை - மலைப்பகுதியில் பாறைகளுக்கிடையே தேங்கும் நீர்நிலை.(சிறிதளவு நீருள்ள பள்ளம்)

மடு - சமநிலத்தில் ஆறு பாயும்போது ஒதுங்கும் அதிமெல்லோட்ட நீர்நிலை.

குட்டை - குடிநீருக்காக இன்றி வளர்ப்பு விலங்குகளைக் குளிப்பாட்டுவதற்காகத் தேக்கப்படும் நீர்.

கூவல் - கிணறுபோன்ற நீர் தேக்கம். ஆனால் ஆழமற்றது.

தருவை - பெரிய ஏரி

அன்போடும் தமிழோடும் ; கரிசல்நாடன் Alias சுரேஷ்மணியன். 

Comments

Popular posts from this blog

கம்பனின் கவித்திறம்.

தமிழின்பால் மிகுந்த ஈடுபாட்டை என்னுள் புகுத்தியது கரிசல் எழுத்தாளர் கி. ராஜநாராயணன் அவர்களின் சாகித்திய அகாடமி விருது பெற்ற நாவலான " கோபல்ல கிராமம்,  கோபல்ல கிராமத்து மக்கள், " எனும் இரு  நாவல்களை நான் பன்னிரண்டு வயதில் படித்து முடித்தேன் அதன் பிறகு நாவல்கள் மீது தணியாத ஆர்வம்.  பிறகு பத்தாம் வகுப்பு பயின்ற காலத்தில் தலைவர் கலைஞர் பற்றிய கவிதை நூலொன்றை எதேச்சையாக படிக்க நேர்ந்தது அந்நூலின் கீழ்கண்ட வரிகள் ஆழ்மனதின் அடிவாரத்தில் சிலந்தி வலையாய் பின்னிக்கொண்டது  இதோ !   அந்த வரிகள் . " தண்டவாளத்தில் நீ தலை வைத்து படுத்ததால்தான் தலைவா ! இன்று தமிழ் நிமிர்ந்து நிற்கிறது. மேலும், அதில் பாரதி பற்றிய கவிதையும் படித்தேன் " இவன் வெள்ளை யானைகளோடு போராடிய போது வீழ்ந்ததில்லை கறுப்பு யானையோடு கைகுலுக்கிய போதுதான் காணாமல் போனான். இவ்வாறான கவிதை வரிகள் என்னுள் கிளர்ச்சியை ஏற்படுத்தின ஆனால் நான் கல்லூரியில் போய் சேர்ந்தது பி.காம் பாடப்பிரிவு ,  அங்கு அக்கவுண்ட்ஸ்,  ஆடிட்டிங்,  பேங்கிங் இது போன்ற தாள்களின் தன்மைகளை பேராசிரியர்கள் விள...

படித்தேன் அது படி தேன்.

சிந்தை சூழ் கம்பன் கம்பனை எனக்குள் ஆழ வேரூன்ற வைத்த இடம் தத்தனூர்  MR கல்லூரியும், தத்தனூர் மேலூர் கிளை நூலகமும்  ஆகும். கம்பன் என்றாலே எனக்குக் குற்றால நீர்வீழ்ச்சியாய் உள்ளம் பூரித்துப் போகிறது, வார்த்தைகள் விக்கித்து நிற்கின்றன.  என்னவென்று சொல்வேன், ஏதென்று சொல்வேன் அவன் காவியப் புகழை.  நெய்தலுக்கும், பாலைக்கும், மருதத்துக்கும், முல்லைக்கும் மேலாக உச்சியில் இருக்கும் குறிஞ்சி நிலத்தின் உச்சியில் வானோடு கைகோர்த்து, மதியோடும், கதிரோடும் தோழமை பேசும் உச்சி மலையில் விளைந்த கற்பகமரம் அவன். கண்ணதாசன் கம்பரின் ஆற்றலைப் புகழும் போது, "  பத்தாயிரம் கவிதை முத்தாக அள்ளிவைத்த சத்தான கம்பனுக்கு ஈடு - இன்னும் வித்தாக வில்லையென்று பாடு! சீதை நடையழகும் ஸ்ரீராமன் தோளழகும் போதை நிறைந்ததெனச் சொல்லி - எனைப் போட்டான் மதுக்குடத்தில் அள்ளி! அண்ணனொடு தம்பியர்கள் நாலாகி ஐந்தாகி ஆறேழு ஆனவிதம் கூறி - எனை ஆளுகிறான் மூளைதனில் ஏறி!  " என்று புகழ்ந்து பாடுவார். அத்தகைய வளமிக்க கற்பனைக்கும், கருத்துக்கும் உரித்தானவர் கம்பர் என்றால் அது மிகைஅன்று. அயோத்தியை வி...

நீ

கொஞ்சம் மது  தொட்டுக்கொள்ள உன் நினைவுகள்,  நீ நினைக்க நான், புகைக்க உன் புன்னகை, இனி வேறென்ன வேண்டும் எனக்கு. இப்படியாக பயணிப்போம்..... கரிசல் நாடன்.