Skip to main content

போய் வா ! தங்க மகனே !


_ போய் வா தங்க நிலாவே ! _

 " பாடும் நிலாவே  'பாடிய நீ 
இன்று பாட மறுப்பதென்ன ! 

" குயில புடிச்சி கூண்டில் அடச்சி 
கூவச் சொல்லுகிற ஒலகம்  '
என்று பாடிய நீ 
எங்களை தவிக்கவிட்டு கூண்டோடு பிரிந்ததென்ன ! 

இந்திர உலக இளசுகளின் நடனத்திற்கு பின்பாட 
உன் தேன் நா உடன் கொண்டு பிரிந்தாயோ !

மாத்திரை அளவும் மாறாமல் 
தமிழ் அறிந்து பா பாடும் உன்னை 
தன் விருத்தப்பா நீ பாட 
என் பாட்டன் கம்பன் அழைத்தானோ !

கோடம்பாக்கத்து கூத்தர்களை புகழ்ந்தது போதும் என்றெண்ணி 
கவிராட்சசன் 
ஒட்டக்கூத்தன் நினைத்தானோ !

தன் சிந்துக்கு நீ குரலிசைக்க வேண்டி 
எட்டயபுர கவிராஜன் பாரதி 
அழைப்பு விடுத்தானோ !

ஆறடி கரும்பை காற்படி சாறாக்கி 
கவிச்சாறு பிழிந்து வைத்து உனக்காக காத்துகொண்டிருந்த 
கவியரசு கண்ணதாசன் 
உனக்கு வருகை மடல் வரைந்தானோ ! 

சத்தான தமிழில் முத்தான சொல்கொண்டு 
கல்கண்டு நிகர் கவியெழுதி வைத்திருக்கும் 
அண்ணன் முத்துக்குமார்  
உன்னை வாவென பகர்ந்தானோ !

அரிதார முகங்களை பாடியது போதுமென 
அவதார நாயகர்களை நேரில் 
அர்ச்சிக்க யாத்திரை போயிருப்பாய்  

அர்ச்சனை முடித்து 
நீண்ட யாத்திரை  விடுத்து 
நீ திரும்பி வரும்போது 

Spb எனும் தங்கக் குரலே 
Tms எனும் வெண்கலக்குரலையும் 
கரம் கோர்த்து அழைத்து வருவாய் 
என கண்ணீரோடு காத்திருக்கிறோம்.

 "" என்னவென்று சொல்வதய்யா  உன் தங்கக் குரல்  பேரழகை

சொல்ல மொழி இல்லையய்யா  உன் கிள்ளைக் குரல்  நாவழகை

கொஞ்சம் தொந்தி சரிந்தவரே  எங்கள் நெஞ்சில் நிறைந்தவரே 

எங்கள் துயரத்தை என்னென்று சொல்வோமோ  
அதை எப்படி சொல்வோமோ  '' 

நீ வான்மேகம் காணாத பாலு  நிலா
இந்த பூலோகம் பாராத மண்  நிலா

கண்ணீரோடு விடை கொடுக்கிறோம் கலைஞனே !

  ; சுரேஷ் மணியன்M a,

Comments

  1. என்றும் வாழ்வார் நம்முடன் தன் இனிய பாடல்கள் வழியாக.

    ReplyDelete
  2. அருமையான பாடல்
    சுத்தமல்லி நீர்த்தேக்கம் கட்டப்பட்ட பிறகுதான் உடையார்பாளையம், பரணம் உள்ளிட்ட பல ஊர்களில் நிலத்தடி நீர் உயர்ந்து, தண்ணீர் பஞ்சம் தீர்க்கப்பட்டது.

    ReplyDelete
  3. உங்கள் கானம் எங்கள் காதுகளை வருடும் வரை உங்கள் புகழ் ஓங்கி ஒளிக்கும்

    ReplyDelete

Post a Comment