Skip to main content

பாருக்குள்ளே நல்ல நாடு

தற்போதைய கொரோனா நோய்த் தொற்று காலத்தில்  அனைத்து ( திமுக வை  திமுக வினரைத் தவிர யாரும் நலத்திட்ட உதவிகள் வழங்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது )   அரசியல் இயக்கங்களும்,தன்னார்வலர்களும், அமைப்புகளும், சில பல நல்ல உள்ள கொண்டோரும் தங்களால் இயன்ற அளவு,  மக்களை நோய்த் தொற்றிலிருந்து  காத்திட வேண்டி அதனை எதிர்கொள்வதற்கான,  வேண்டிய தடுப்பு பொருள்களையும் , மக்களுக்கு வேண்டிய பல்வேறு ஆலோசனைகளையும் ,ஏழ்மையில் வாடும் அடித்தட்டு  மக்களுக்கான  நல உதவிகளையும் செய்து வருகிறார்கள்  என்பது நம் தமிழக மக்களின் சார்பில்  பாராட்டுக்குரியது.

ஆனால்,
   இந்தியாவில் இருக்கிற, குறிப்பாக தமிழ்நாட்டில் இருக்கிற எந்த ஒரு அரசியல் இயக்கமோ, அதன் தலைவர்களோ, ஊரடங்கு காலத்தில் தற்காலிகமாக கடைபிடிக்கப்பட்டு வரும் மதுபானக் கடை மூடலை ,நிரந்தரமாக மூடி மக்களின் வாழ்வாதாரத்தை, ஆரோக்கியத்தை உயர்த்தவோ,   அறிவார்ந்த எதிர்கால இளைஞர் சமுதாயத்தை   உருவாக்க வேண்டும் என்றோ , யாரும் இது நாள் வரை யாதொரு  கருத்தோ ,அறிக்கையோ, பேட்டியோ  தெரிவிக்கவில்லை என்பதை அறிவார்ந்த ( அறிவு இருந்தால்தானே)  தமிழ்ச்சமுதாயம் எண்ணிப் பார்க்க வேண்டும்.

குறிப்பாக தமிழகத்தில் உள்ள  அனைத்து  அரசியல் இயக்கங்களும்  மக்களை சிந்திக்கத் தெரியாத மாக்களாக வைத்திருக்க  வேண்டும் என்ற ஒரே ஏகமனதான  எண்ணத்தின் காரணமாக , மக்களின் பொருளாதாரத்தை சுரண்டுகிற , தனியார் மதுபான ஆலை உரிமையாளர்களை கொழிக்க வைக்கிற  மதுக்கடையினை  நிரந்தரமாக மூட வேண்டும் என்றோ ,அல்லது அதற்கான மாற்று வழிகளாக உள்ள மதுக்கடைகளை குறைப்பது குறித்தோ,  குரல் கொடுக்காமல் தங்கள்   விஷயத்தில் ( அரசியல் சுயநல நோக்குடன்)   ஒற்றுமையாக தமது நவ துவாரத்தையும் கனக்கச்சிதமாக மூடிக்கொண்டு இருக்கிறார்கள் போலும்.

" பாரு" க்குள்ளே நல்ல நாடு எங்கள் பாரத நாடு

Comments

Popular posts from this blog

படித்தேன் அது படி தேன்.

சிந்தை சூழ் கம்பன் கம்பனை எனக்குள் ஆழ வேரூன்ற வைத்த இடம் தத்தனூர்  MR கல்லூரியும், தத்தனூர் மேலூர் கிளை நூலகமும்  ஆகும். கம்பன் என்றாலே எனக்குக் குற்றால நீர்வீழ்ச்சியாய் உள்ளம் பூரித்துப் போகிறது, வார்த்தைகள் விக்கித்து நிற்கின்றன.  என்னவென்று சொல்வேன், ஏதென்று சொல்வேன் அவன் காவியப் புகழை.  நெய்தலுக்கும், பாலைக்கும், மருதத்துக்கும், முல்லைக்கும் மேலாக உச்சியில் இருக்கும் குறிஞ்சி நிலத்தின் உச்சியில் வானோடு கைகோர்த்து, மதியோடும், கதிரோடும் தோழமை பேசும் உச்சி மலையில் விளைந்த கற்பகமரம் அவன். கண்ணதாசன் கம்பரின் ஆற்றலைப் புகழும் போது, "  பத்தாயிரம் கவிதை முத்தாக அள்ளிவைத்த சத்தான கம்பனுக்கு ஈடு - இன்னும் வித்தாக வில்லையென்று பாடு! சீதை நடையழகும் ஸ்ரீராமன் தோளழகும் போதை நிறைந்ததெனச் சொல்லி - எனைப் போட்டான் மதுக்குடத்தில் அள்ளி! அண்ணனொடு தம்பியர்கள் நாலாகி ஐந்தாகி ஆறேழு ஆனவிதம் கூறி - எனை ஆளுகிறான் மூளைதனில் ஏறி!  " என்று புகழ்ந்து பாடுவார். அத்தகைய வளமிக்க கற்பனைக்கும், கருத்துக்கும் உரித்தானவர் கம்பர் என்றால் அது மிகைஅன்று. அயோத்தியை வி...

கம்பனின் கவித்திறம்.

தமிழின்பால் மிகுந்த ஈடுபாட்டை என்னுள் புகுத்தியது கரிசல் எழுத்தாளர் கி. ராஜநாராயணன் அவர்களின் சாகித்திய அகாடமி விருது பெற்ற நாவலான " கோபல்ல கிராமம்,  கோபல்ல கிராமத்து மக்கள், " எனும் இரு  நாவல்களை நான் பன்னிரண்டு வயதில் படித்து முடித்தேன் அதன் பிறகு நாவல்கள் மீது தணியாத ஆர்வம்.  பிறகு பத்தாம் வகுப்பு பயின்ற காலத்தில் தலைவர் கலைஞர் பற்றிய கவிதை நூலொன்றை எதேச்சையாக படிக்க நேர்ந்தது அந்நூலின் கீழ்கண்ட வரிகள் ஆழ்மனதின் அடிவாரத்தில் சிலந்தி வலையாய் பின்னிக்கொண்டது  இதோ !   அந்த வரிகள் . " தண்டவாளத்தில் நீ தலை வைத்து படுத்ததால்தான் தலைவா ! இன்று தமிழ் நிமிர்ந்து நிற்கிறது. மேலும், அதில் பாரதி பற்றிய கவிதையும் படித்தேன் " இவன் வெள்ளை யானைகளோடு போராடிய போது வீழ்ந்ததில்லை கறுப்பு யானையோடு கைகுலுக்கிய போதுதான் காணாமல் போனான். இவ்வாறான கவிதை வரிகள் என்னுள் கிளர்ச்சியை ஏற்படுத்தின ஆனால் நான் கல்லூரியில் போய் சேர்ந்தது பி.காம் பாடப்பிரிவு ,  அங்கு அக்கவுண்ட்ஸ்,  ஆடிட்டிங்,  பேங்கிங் இது போன்ற தாள்களின் தன்மைகளை பேராசிரியர்கள் விள...

அம்பிகாபதி

தந்தை மகற்கு ஆற்றிய உதவி : உலக இலக்கியங்கள் வழி நாம் அறியும் உன்னதமான காதல் ஜோடிகள் ரோமியோ ஜூலியட் லைலா மஜ்னு  இவ்வாறான இன்ன பிறர். ஆனால் தமிழின் தனிப்பாடல்கள் வழியாக நம் பாட்டன் கம்பருக்கு அம்பிகாபதி என்ற மகன் இருந்ததாகவும், அவன் சோழ மன்னனின் மகளான இளவரசி அமராவதியை காதல் செய்ததாகவும், அந்தக் காதலே அவன் ஆவி பறிபோவதற்கு காரணமாகவும் இருந்ததாகவும் அறிய முடிகிறது . அறிஞர் பெருமக்கள் கம்பருக்கு மகன் இருந்து அவன் சோழ மன்னனால் கொல்லப்பட்டான் என்பதற்கான ஆதாரங்களை, தரவுகளை, யூகங்களை கம்பராமாயணத்தின் வழி விளக்க முயற்சித்துள்ளனர்.  அதாவது ராமனை பிரிந்த தசரதனின் அழுகைக்கும், இந்திரஜித் மாண்ட போது ராவணின் அழுகைக்கும் இடையே நிரம்ப வித்தியாசம் காணப்படுகிறது.  ராவணன் அழும் போது கம்பனே ராவணணாக மாறி அழுவது போன்ற துன்பியல் உணர்வைக் காண முடிகின்றது என்பர். கல்லூரியில் நான் தமிழிலக்கியம் பயில ஆரம்பித்த தொடக்க காலத்தில் எம் ஊரான  "சுத்தமல்லி " யை சேர்ந்த திருச்சி தேசிய கல்லூரியில் இயற்பியல் பயின்ற, இன்றும் அதிமுக வில் பொறுப்பு வகிக்கும் என் உறவுமுறை மாமனான முருகன் அவர்கள் முதன் ...