Skip to main content

சொல்லேருழவன்

வில்லேரருழவனும்,  சோல்லேருழவனும்.

           சோழன் குளமுற்றத்து துஞ்சிய கிள்ளி வளவன்,  அவன் பகைவனான மலையமானின் புதல்வர்களை யானைக்காலின் கீழ் கிடத்தி கொல்ல முயல்கிறான். தெருமன்றத்தில் வேடிக்கை காண மக்களும்  காத்து நிற்கின்றனர்.   மன்னனும் நிற்கிறான்.  யானையை விட்டு மிதிப்பதற்காக மலையமானின் குழந்தைகள் தரையிலே கிடத்தப்பட்டிருக்கின்றனர், எதிரே குன்றசைந்தாற் போன்று பட்டத்து யானையை பாகன் அழைத்து வருகிறான்,  மயான அமைதி அவ்விடத்தில் தம்மை மிதித்து கொல்ல வருவதையும் அறியா அம் மழலைகள் யானையை பார்த்து கை கொட்டி சிரிக்கின்றனர் . நெஞ்சை சுடும் இக்காட்சியை பார்த்த கோவூர்க் கிழார் எனும் பழந் தமிழ் புலவன் மன்னனை நோக்கி தன் கவி வாளை சுழற்றுகிறான்.

பாடல்
   
" நீயே, புறவின் அல்லல் அன்றியும் பிறவும்
இடுக்கண் பலவும் விடுத்தோன் மருகனை
இவரே,புலனுழுது உண்மார் புன்கண் அஞ்சித்
தமது பகுத்துண்ணும் தண்ணிழல் வாழ்நர்
களிறுகண்டு அழூஉம்  அழாஅல் மறந்த

புன்தலைச் சிறா அர் மன்று மருண்டு நோக்கி
விருந்திற் புன்கணநோ வுடையர்,
கேட்டனை யாயின் நீ வேட்டது செய்ம்மே !  

பொருள் -
(  மன்னனே நீ புறாவின் துயரத்தை மட்டுமல்ல,  மற்ற உயிர்களின் துன்பத்தையும் போக்கும் சோழர் குடியில் பிறந்தவன்.
இச்சிறுவர்களோ,  கற்றவர் பாடும் வறுமையை காணவே அஞ்சி மற்றவருக்கு பகுத்து கொடுத்து வாழும் பண்பான குடியில் பிறந்தவர்கள்.  தங்களை கொல்ல வந்து நிற்கும் யானையைக் கண்டும் கூட அஞ்சாமல் கை கொட்டி நிற்கும் இச் சின்னஞ் சிறுகுழந்தைகள் !  இப்பெரிய கூட்டதை பார்த்து பயந்து நிற்கின்றனர்  ( இத்தகைய பிள்ளைகளை நீ கொல்ல நினைக்கலாமா ? )  நான் கூற வேண்டியதை கூறிவிட்டேன் !  இனி உன் விருப்பப் ப செய்துகொள்    )
மன்னனும் தன் தவறுணர்ந்து குழந்தைகளை விடுவித்தான்  .
  அரசனாயினும் அதற்காய் பயம்கொள்ளாது அறிவுரை வழங்கிய புலவனே நீ வாழி! வாழி!

Comments

Popular posts from this blog

கம்பனின் கவித்திறம்.

தமிழின்பால் மிகுந்த ஈடுபாட்டை என்னுள் புகுத்தியது கரிசல் எழுத்தாளர் கி. ராஜநாராயணன் அவர்களின் சாகித்திய அகாடமி விருது பெற்ற நாவலான " கோபல்ல கிராமம்,  கோபல்ல கிராமத்து மக்கள், " எனும் இரு  நாவல்களை நான் பன்னிரண்டு வயதில் படித்து முடித்தேன் அதன் பிறகு நாவல்கள் மீது தணியாத ஆர்வம்.  பிறகு பத்தாம் வகுப்பு பயின்ற காலத்தில் தலைவர் கலைஞர் பற்றிய கவிதை நூலொன்றை எதேச்சையாக படிக்க நேர்ந்தது அந்நூலின் கீழ்கண்ட வரிகள் ஆழ்மனதின் அடிவாரத்தில் சிலந்தி வலையாய் பின்னிக்கொண்டது  இதோ !   அந்த வரிகள் . " தண்டவாளத்தில் நீ தலை வைத்து படுத்ததால்தான் தலைவா ! இன்று தமிழ் நிமிர்ந்து நிற்கிறது. மேலும், அதில் பாரதி பற்றிய கவிதையும் படித்தேன் " இவன் வெள்ளை யானைகளோடு போராடிய போது வீழ்ந்ததில்லை கறுப்பு யானையோடு கைகுலுக்கிய போதுதான் காணாமல் போனான். இவ்வாறான கவிதை வரிகள் என்னுள் கிளர்ச்சியை ஏற்படுத்தின ஆனால் நான் கல்லூரியில் போய் சேர்ந்தது பி.காம் பாடப்பிரிவு ,  அங்கு அக்கவுண்ட்ஸ்,  ஆடிட்டிங்,  பேங்கிங் இது போன்ற தாள்களின் தன்மைகளை பேராசிரியர்கள் விள...

நீ

கொஞ்சம் மது  தொட்டுக்கொள்ள உன் நினைவுகள்,  நீ நினைக்க நான், புகைக்க உன் புன்னகை, இனி வேறென்ன வேண்டும் எனக்கு. இப்படியாக பயணிப்போம்..... கரிசல் நாடன்.

அனிச்சம்

தமிழ் பேசும் உறவுகளுக்கு இனிய காலை/ மதியம் /மாலை /இரவு வணக்கம் ( படிக்கும் நேரத்திற்கேற்ப பொழுதை சேர்த்துப் படிக்கவும்). ""அழகாய் இருப்பவை எல்லாம்  உன்னை நினைவுபடுத்துகின்றன உன்னை நினைவுபடுத்துபவை எல்லாம் அழகாக இருக்கின்றன'' என்ற காதல் கவி தபுசங்கரின் வரிகளைப் போல,                         "" படித்தற்குரியதெல்லாம் ரசனைக்குரியதாய் இருக்கிறது  ரசனைக்குரியதெல்லாம் படித்தற்குரியதாய் '' இருக்கிறது என்பேன் நான் .     அகநூலோ,  புறநூலோ,  அகப்புற நூலோ,  -நீதிநூலோ எவ்வித நூலாயினும் வாழ்வியல் கருத்து நெறிகளைத்தாண்டி இலக்கிய இன்பம் பயக்குகின்ற, இலக்கிய ரசனை தருகின்ற கருத்தமைந்த வரிகள் கண்டிப்பாக இடம் பெற்றிருக்கும், இது திண்ணம்.            ஆனால் இன்றைய தமிழிலக்கிய மாணவர்களுக்கான  கல்வி முறையில் ரசனை, அழகியல் என்பதை இலக்கியங்களின் துணைக் கொண்டு கற்பிக்கப்படவில்லை, அது போன்ற பாடத்திட்டங்களும் அமைக்கப்படவில்லை ,அப்படியே பாடத்திட்டம் அமைக்கப்பட்டிருந்தாலும், தக்காரா...