Skip to main content

காக்கையும் அரசமரமும் .

பள்ளிக்கூடத்துல படிச்ச காலகட்டத்துல நம்மாள மறக்க முடியாத ஒரு விஷயம் என்னவென்றால்
" பள்ளிக்கூடத்துக்கு இன்சுபெக்சனுக்கு இன்ஸ்பெக்டர் ( ஆய்வாளர்)  வந்து கேள்வி கேட்பாரே அதுதான்.

அன்றைக்கு மட்டும் எல்லா வாத்தியாருகளும் நேரத்துல வந்திடுவாங்க,எங்க ஊரு சுத்தமல்லி சின்ன பள்ளிக்கூடம் அருகில் ஒரு பெரிய அரசமரம் இருந்துச்சி, இலையெல்லாம் கீழே உதிர்ந்து சருகாகி கிடக்கும்  அந்த சருகையெல்லாம் பசங்கதான் பொறுக்கனும், ஆளுக்கொரு சின்ன குச்சிய வச்சிக்கிட்டு வடைய கம்பியால குத்தி குத்தி எடுப்பாங்களே அது மாதிரி அந்த குச்சி நிறையும் குத்தி குத்தி எடுப்போம். பொம்பள  பசங்க எல்லாம் க்ளாஸ் ரூமை கூட்டி பெருக்கிட்டு வகுப்பு ஆரம்பமானதும் நாங்க எல்லோரும் வாயில விரல வச்சி பொத்திகிட்டு அமைதியா உட்கார்ந்திருப்போம்.

அந்த அரச மரம் மட்டும் சலசலன்னு சத்தம் போடும், சமையல் ரூம் பக்கத்துல நாலு காக்காவும் சத்தம் போடும்.
 புலி வருது, புலி வருது, எனும் கதையாக பன்னிரண்டு மணி அளவுல ஜீப்புல வருவாரு அந்த இன்ஸ்பெக்டரு.

அப்போ பள்ளிக்கூடமே  நிசப்தமாக இருக்கும்.
 அந்த நிசப்தத்தின் இடையே பள்ளிக்கூடத்து சமையல் கொட்டாயிலிருந்து  சோயாபருப்புடன்  முட்டைக்கோஸ் வேகும் போது அந்த குழம்பிலிருந்து ஒரு அபார வாசம் வருமே !  அடடா! அடடா !  தேவாமிர்தமாவது, மசிராவது, அப்படி கமகமக்கும்.

சரி விசயத்துக்கு வருவோம் இங்க இன்ஸ்பெக்டரு அதான் ஆய்வாளருக்கு நேர்ந்த கதிய பாருங்க.

ஒரு பள்ளிக்கூடத்துக்கு ஆய்வாளர் ஒருத்தர்
வந்தாரு.
அந்த பள்ளிக்கூடத்தப் பத்தி ஏற்கனவே நிறைய
அவரோட வேலை பாத்தவங்க
சொல்லி இருக்காங்க,  அதனால எதுக்கும்
தயாராத்தான் அவர் வந்தார்.
முதல்ல ஒரு வகுப்புக்குள்ள போன
உடனே பசங்க எல்லாம்
எழுந்திருச்சு நின்னாங்க.

சரி எதாவது கேள்வி கேக்க
வேண்டாம்ன்னு முதல் பையன எழுப்பி.....
"உன் பேர் சொல்லு" ன்னாரு
அவனும் "பழனி"ன்னான்
"உன் அப்பா பேரு"
"பழனியப்பா"
அடுத்தப் பையன எழுப்பி
"உன் பேர்
சொல்லு"ன்னாரு
அவனும் "மாரி"ன்னான்
"உன் அப்பா பேரு"
"மாரியப்பா"
அவருக்கு கொஞ்சம் டவுட் வருது.
இருந்தும் அடுத்தப் பையன எழுப்பி..........
"உன் பேர் சொல்லு"
"பிச்சை"
"உன் அப்பா பேரு" "பிச்சையப்பா"
இப்பொ அவருக்கு கன்பார்ம் ஆயிடுச்சு.
சரி பசங்க வச்சி செய்ய ஆரம்பிச்சுட்டாங்க
அப்படினு புரிஞ்சுருச்சு.
அடுத்தப்
பையன எழுப்பினாரு.
"முதல்ல நீ உன் அப்பா பேரைச்
சொல்லு...."
(மனசுக்குள்ள ஒரு பெருமிதம்)
"ஜான்"

"இப்பொ உன் பேரைச் சொல்லு" "ஜான்சன்"
அப்புறம் என்ன !!!! அதுக்கு அப்பறம் அந்த
பள்ளிக்கு எந்த ஆய்வாளரும் வரதே இல்ல.

அன்போடு : சுரேஷ்மணியன்.

Comments

Popular posts from this blog

படித்தேன் அது படி தேன்.

சிந்தை சூழ் கம்பன் கம்பனை எனக்குள் ஆழ வேரூன்ற வைத்த இடம் தத்தனூர்  MR கல்லூரியும், தத்தனூர் மேலூர் கிளை நூலகமும்  ஆகும். கம்பன் என்றாலே எனக்குக் குற்றால நீர்வீழ்ச்சியாய் உள்ளம் பூரித்துப் போகிறது, வார்த்தைகள் விக்கித்து நிற்கின்றன.  என்னவென்று சொல்வேன், ஏதென்று சொல்வேன் அவன் காவியப் புகழை.  நெய்தலுக்கும், பாலைக்கும், மருதத்துக்கும், முல்லைக்கும் மேலாக உச்சியில் இருக்கும் குறிஞ்சி நிலத்தின் உச்சியில் வானோடு கைகோர்த்து, மதியோடும், கதிரோடும் தோழமை பேசும் உச்சி மலையில் விளைந்த கற்பகமரம் அவன். கண்ணதாசன் கம்பரின் ஆற்றலைப் புகழும் போது, "  பத்தாயிரம் கவிதை முத்தாக அள்ளிவைத்த சத்தான கம்பனுக்கு ஈடு - இன்னும் வித்தாக வில்லையென்று பாடு! சீதை நடையழகும் ஸ்ரீராமன் தோளழகும் போதை நிறைந்ததெனச் சொல்லி - எனைப் போட்டான் மதுக்குடத்தில் அள்ளி! அண்ணனொடு தம்பியர்கள் நாலாகி ஐந்தாகி ஆறேழு ஆனவிதம் கூறி - எனை ஆளுகிறான் மூளைதனில் ஏறி!  " என்று புகழ்ந்து பாடுவார். அத்தகைய வளமிக்க கற்பனைக்கும், கருத்துக்கும் உரித்தானவர் கம்பர் என்றால் அது மிகைஅன்று. அயோத்தியை வி...

கம்பனின் கவித்திறம்.

தமிழின்பால் மிகுந்த ஈடுபாட்டை என்னுள் புகுத்தியது கரிசல் எழுத்தாளர் கி. ராஜநாராயணன் அவர்களின் சாகித்திய அகாடமி விருது பெற்ற நாவலான " கோபல்ல கிராமம்,  கோபல்ல கிராமத்து மக்கள், " எனும் இரு  நாவல்களை நான் பன்னிரண்டு வயதில் படித்து முடித்தேன் அதன் பிறகு நாவல்கள் மீது தணியாத ஆர்வம்.  பிறகு பத்தாம் வகுப்பு பயின்ற காலத்தில் தலைவர் கலைஞர் பற்றிய கவிதை நூலொன்றை எதேச்சையாக படிக்க நேர்ந்தது அந்நூலின் கீழ்கண்ட வரிகள் ஆழ்மனதின் அடிவாரத்தில் சிலந்தி வலையாய் பின்னிக்கொண்டது  இதோ !   அந்த வரிகள் . " தண்டவாளத்தில் நீ தலை வைத்து படுத்ததால்தான் தலைவா ! இன்று தமிழ் நிமிர்ந்து நிற்கிறது. மேலும், அதில் பாரதி பற்றிய கவிதையும் படித்தேன் " இவன் வெள்ளை யானைகளோடு போராடிய போது வீழ்ந்ததில்லை கறுப்பு யானையோடு கைகுலுக்கிய போதுதான் காணாமல் போனான். இவ்வாறான கவிதை வரிகள் என்னுள் கிளர்ச்சியை ஏற்படுத்தின ஆனால் நான் கல்லூரியில் போய் சேர்ந்தது பி.காம் பாடப்பிரிவு ,  அங்கு அக்கவுண்ட்ஸ்,  ஆடிட்டிங்,  பேங்கிங் இது போன்ற தாள்களின் தன்மைகளை பேராசிரியர்கள் விள...

அம்பிகாபதி

தந்தை மகற்கு ஆற்றிய உதவி : உலக இலக்கியங்கள் வழி நாம் அறியும் உன்னதமான காதல் ஜோடிகள் ரோமியோ ஜூலியட் லைலா மஜ்னு  இவ்வாறான இன்ன பிறர். ஆனால் தமிழின் தனிப்பாடல்கள் வழியாக நம் பாட்டன் கம்பருக்கு அம்பிகாபதி என்ற மகன் இருந்ததாகவும், அவன் சோழ மன்னனின் மகளான இளவரசி அமராவதியை காதல் செய்ததாகவும், அந்தக் காதலே அவன் ஆவி பறிபோவதற்கு காரணமாகவும் இருந்ததாகவும் அறிய முடிகிறது . அறிஞர் பெருமக்கள் கம்பருக்கு மகன் இருந்து அவன் சோழ மன்னனால் கொல்லப்பட்டான் என்பதற்கான ஆதாரங்களை, தரவுகளை, யூகங்களை கம்பராமாயணத்தின் வழி விளக்க முயற்சித்துள்ளனர்.  அதாவது ராமனை பிரிந்த தசரதனின் அழுகைக்கும், இந்திரஜித் மாண்ட போது ராவணின் அழுகைக்கும் இடையே நிரம்ப வித்தியாசம் காணப்படுகிறது.  ராவணன் அழும் போது கம்பனே ராவணணாக மாறி அழுவது போன்ற துன்பியல் உணர்வைக் காண முடிகின்றது என்பர். கல்லூரியில் நான் தமிழிலக்கியம் பயில ஆரம்பித்த தொடக்க காலத்தில் எம் ஊரான  "சுத்தமல்லி " யை சேர்ந்த திருச்சி தேசிய கல்லூரியில் இயற்பியல் பயின்ற, இன்றும் அதிமுக வில் பொறுப்பு வகிக்கும் என் உறவுமுறை மாமனான முருகன் அவர்கள் முதன் ...