Skip to main content

Posts

Showing posts from March, 2020

பள்ளிக்கூடம்

பள்ளிக்கூடம் எங்க ஊரு சுத்தமல்லியில் நான்  1989 களில் பள்ளியில் படிக்கும்போது, தொடக்கப்பள்ளிக்கும், உயர்நிலைப்பள்ளிக்கும் நாங்கள் வைத்திருந்த பெயர்  சின்னப்பள்ளிக்கொடம், பெரியபள்ளிக்கொடம் என்பதாகும்.     ஊருக்கு கிழக்குப்பகுதியில் சிவன் கோவிலுக்கு அருகில் இருப்பது ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியான  சின்ன பள்ளிக்கூடம். ஊருக்கு மத்தியில் காளியம்மன் கோவில் அருகில் இருப்பது அரசு உயர்நிலைப்பள்ளி எனும் பெரிய பள்ளிக்கூடம், ஆனால் இந்த இரண்டு பள்ளிக்கும் உள்ள பொருத்தம் என்னவென்றால் பள்ளிக்கு அருகில் கண்டிப்பாக சிறிய குளம் ஒன்று உண்டு. சின்னப்பள்ளிக்கூடம் என்றாலே இன்றும் எங்களுக்கு நினைவுக்கு வரும் ஆசிரியர்கள் ஒன்றாம் வகுப்பு  அ பிரிவு பிள்ளையார் கோவில் தங்கராசு வாத்தியார்,  ஆ பிரிவு மீசை வாத்தியார் ( எனக்கு பக்கத்து வீடு)  இரண்டாம் வகுப்பு குண்டு டீச்சர் ( தங்கராசு வாத்தியாரின் மனைவி சரசுவதிக்கு நாங்கள் வைத்த பெயர்) மூன்றாம் வகுப்பு சின்னசாமி வாத்தியார் ( எனக்கு பக்கத்து வீடு) பிறகு மீசை மாரிமுத்து வாத்தியார், பெரிய வாத்தியார் (H M)  சாமிநாதன் . மேலே சொன்ன வாத்தியார்கள் எல்லோரும் சின்னபள