Skip to main content

Posts

Showing posts from 2017

பழமொழி

நான் "ஆல் "ன்னு சொன்னா, இவன் "பூல் "ன்னு சொல்றான்ய்யா  .    இது மிகச்சிலரால் அல்லது பயன்பாட்டிலோ இல்லாத பழமொழியாகும். இது ஆபாசமான பழமொழியன்று,  பழமொழி என்பது அனுபவத்தின் வாயிலாக மாந்தரின் உணர்ச்சி வெளியீட்டு கருவியாக வெளிப்படுத்துவது ஆகும்.  ஆனாலும் இந்த பழமொழிகள் பயன்படுத்தும், பிறரிடம்  கூறும் போக்கு நம்மவரிடையே நாளுக்கு நாள் அருகிவருகின்றது என்பது சற்றேறழத்தாழ நிதர்சனமான உண்மையும் கூட.   வயதான கிராமத்துவாசிகளிடம் நாம் பேச்சு கொடுத்தோமேயானால் பேச்சினூடே அவர்களின் வாழ்வியலில் கண்டறிந்த, கேட்டறிந்த பழமொழிகள் எண்ணெய் தோய்த்து போட்ட பாப்கார்ன் சோளமாய் வெடித்துச்சிதறும்  .    வேலையே செய்ய திறமில்லாத ஒரு நபரின் வலிவை விளக்க  " அருக்க மாட்டாதவன் சூத்துல அய்ம்பத்தெட்டு அருவாளாம் " என்றும்,  ஒரே நபருக்கு ஒரே சமயத்தில் பல வேலையிருக்குமாயின்     " ஊருக்கு ஒரு தேவுடியா, அவ யாருக்குன்னுதான் ஆடுவாளாம் " என்ற வகையில் சொலவடைகள் சுவைமிகுந்ததாக இருக்கும்.    பழமொழிகள் வட்டாரம் சார்ந்த வழக்கு மொழியினதாகவும் இருக்கும், நெல்லை, கொங்கு மண்டலத்து பழமொழிக

திண்ணை

காணாமல் போன திண்ணை. அனைவருக்கும் இனிமையான வணக்கம். இன்றை நவநாகரீக தமிழரின் வாழ்வியல் பயன்பாட்டிலும், அடித்தட்டு சமூக மக்களின்,  கிராமிய வாழ்க்கை பயன்பாட்டிலும் அவர்களாகவே வலிந்து தொலைத்துக் கொண்டிருப்பது " திண்ணை " என்றுதான் சொல்ல வேண்டும். காணாமல் போன தமிழரின் கருவிகளாக  முதன்மையானதாக - அம்மிக்கல்லையும் - மாவு அரைக்கும் குடைக்கல்லையும் -உரலையும் உலக்கையையும் சேர்த்துக்கொள்ளலாம். அரிதினும் அரிதாய் மேற்சொன்ன அடுதலுக்கு ( சமையல் செய்ய உதவிய பொருள்கள் ) பயன்பட்ட பொருள்களை சில கிராமங்களில் பயன்பாட்டில் இருப்பதை காணும் போது ஓர் இனம் புரியாத மகிழ்ச்சியும், பெருமிதமும் தோன்றும். அத்தகைய காணாமல் போன பட்டியலில் நம்மவர்கள் திண்ணையையும் சேர்த்துவிட்டார்கள். `` திண்ணை " இது தமிழரின் வீட்டின் முன்பகுதியில் நிலைக்கதவு எனும் வாசற்படியின் நடைபாதையின் இருமருங்கிலும் ஒன்றரை அடி முதல் உயரம் கொண்டதாய் அமைக்கப்பட்டிருக்கும். திண்ணை பள்ளிக்கூடம், திண்ணைப்பேச்சு, திண்ணையிலே கிடந்தவனுக்கு திடுக்குன்னு வந்துதான் வாழ்க்கை எனும் சொற்கள், சொலவடைகள்  வழி திண்ணையின் பயன்பாட்ட

காக்கையும் அரசமரமும் .

பள்ளிக்கூடத்துல படிச்ச காலகட்டத்துல நம்மாள மறக்க முடியாத ஒரு விஷயம் என்னவென்றால் " பள்ளிக்கூடத்துக்கு இன்சுபெக்சனுக்கு இன்ஸ்பெக்டர் ( ஆய்வாளர்)  வந்து கேள்வி கேட்பாரே அதுதான். அன்றைக்கு மட்டும் எல்லா வாத்தியாருகளும் நேரத்துல வந்திடுவாங்க,எங்க ஊரு சுத்தமல்லி சின்ன பள்ளிக்கூடம் அருகில் ஒரு பெரிய அரசமரம் இருந்துச்சி, இலையெல்லாம் கீழே உதிர்ந்து சருகாகி கிடக்கும்  அந்த சருகையெல்லாம் பசங்கதான் பொறுக்கனும், ஆளுக்கொரு சின்ன குச்சிய வச்சிக்கிட்டு வடைய கம்பியால குத்தி குத்தி எடுப்பாங்களே அது மாதிரி அந்த குச்சி நிறையும் குத்தி குத்தி எடுப்போம். பொம்பள  பசங்க எல்லாம் க்ளாஸ் ரூமை கூட்டி பெருக்கிட்டு வகுப்பு ஆரம்பமானதும் நாங்க எல்லோரும் வாயில விரல வச்சி பொத்திகிட்டு அமைதியா உட்கார்ந்திருப்போம். அந்த அரச மரம் மட்டும் சலசலன்னு சத்தம் போடும், சமையல் ரூம் பக்கத்துல நாலு காக்காவும் சத்தம் போடும்.  புலி வருது, புலி வருது, எனும் கதையாக பன்னிரண்டு மணி அளவுல ஜீப்புல வருவாரு அந்த இன்ஸ்பெக்டரு. அப்போ பள்ளிக்கூடமே  நிசப்தமாக இருக்கும்.  அந்த நிசப்தத்தின் இடையே பள்ளிக்கூடத்து சமையல் கொட்டாயிலிருந்

மீண்டும் பள்ளிக்கு போகலாம் !

எங்க ஊரு சுத்தமல்லியில் நான்  1989 களில் பள்ளிகளில் படிக்கும்போது, தொடக்கப்பள்ளிக்கும், உயர்நிலைப்பள்ளிக்கும் நாங்கள் வைத்திருந்த பெயர்  சின்னப்பள்ளிக்கொடம், பெரியபள்ளிக்கொடம் என்பதாகும்.    ஊருக்கு கிழக்குப்பகுதியில் சிவன் கோவிலுக்கு அருகில் இருப்பது ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியான  சின்ன பள்ளிக்கூடம். ஊருக்கு மத்தியில் காளியம்மன் கோவில் அருகில் இருப்பது அரசு உயர்நிலைப்பள்ளி எனும் பெரிய பள்ளிக்கூடம், ஆனால் இந்த இரண்டு பள்ளிக்கும் உள்ள பொருத்தம் என்னவென்றால் பள்ளிக்கு அருகில் கண்டிப்பாக சிறிய குளம் ஒன்று உண்டு. சின்னப்பள்ளிக்கூடம் என்றாலே இன்றும் எங்களுக்கு நினைவுக்கு வரும் ஆசிரியர்கள் ஒன்றாம் வகுப்பு  அ பிரிவு பிள்ளையார் கோவில் தங்கராசு வாத்தியார்,  ஆ பிரிவு மீசை வாத்தியார் ( எனக்கு பக்கத்து வீடு)  இரண்டாம் வகுப்பு குண்டு டீச்சர் ( தங்கராசு வாத்தியாரின் மனைவி சரசுவதிக்கு நாங்கள் வைத்த பெயர்) மூன்றாம் வகுப்பு சின்னசாமி வாத்தியார் ( எனக்கு பக்கத்து வீடு) பிறகு மீசை மாரிமுத்து வாத்தியார், பெரிய வாத்தியார் (H M)  சாமிநாதன் . மேலே சொன்ன வாத்தியார்கள் எல்லோரும் சின்னபள்ளிக்கூட மாண

குறும்பு மந்தி

தோழி ____ இந்த வார்த்தை சங்ககாலத்திலும், சமகாலத்திலும் தவிர்க்கமுடியாததாகும். அதிலும் சங்க இலக்கியத்தில் தோழி என்பவள் தலைவியின் சிறுவயது முதலே உடனிருந்து பழகி தலைவிக்கு மிக்க உறுதுணையாகவும், களவு வாழ்வில் தலைவி  ஈடுபடும்  போதும் ,தலைவன் பிரிவால் வாடும் தலைவிக்கு ஆறுதல் கூறுபவளாக, நல்லது கூறி ஆற்றுபடுத்துபவளாக  தலைவியை பிரிந்து செல்லும் தலைவனுக்கு  அறவுரை கூறுபவளாக, தலைவி கற்பு வாழ்க்கையில் ஈடுபட்டிட அறத்தொடு நிற்கும் முதல் கருவியாக தோழியே திகழ்கிறாள்.  அகப்பாடல்களில் தோழி என்னும் பாத்திரத்தை தவிர்க்க நேர்ந்தால் அகப்பாடல்களின் சுவை முற்றாக இழக்க நேரிடும், அத்தகைய முறையில் புலவர்களால் உருவாக்கப்பட்டதே இப்பாத்திரம். அதிலும் தோழிக்கூற்று வழியாக பல வாழ்வியல் கூறுகளை  பல இனிமையான இயற்கை நிகழ்வுகளோடு இயைந்த பாடல்களை  படிக்குந்தோறும் ஒருவகையான இலக்கிய இன்பத்திற்கு ஏது நிகர். நற்றிணையில் பொதும்பில் கிழார் எனும் புலவரின் பாடலொன்றில், பலகாலமாக தலைவன் ஒருவன்  தலைவியை காதலித்து இன்பம் தூய்த்து வருகிறான். பகல் பொழுதில் திணைப்புனத்தில்  திணையுண்ண வரும் கிளிகளையும், குருவிகளையும்  விரட்டிக் காத்த

அம்பிகாபதி

தந்தை மகற்கு ஆற்றிய உதவி : உலக இலக்கியங்கள் வழி நாம் அறியும் உன்னதமான காதல் ஜோடிகள் ரோமியோ ஜூலியட் லைலா மஜ்னு  இவ்வாறான இன்ன பிறர். ஆனால் தமிழின் தனிப்பாடல்கள் வழியாக நம் பாட்டன் கம்பருக்கு அம்பிகாபதி என்ற மகன் இருந்ததாகவும், அவன் சோழ மன்னனின் மகளான இளவரசி அமராவதியை காதல் செய்ததாகவும், அந்தக் காதலே அவன் ஆவி பறிபோவதற்கு காரணமாகவும் இருந்ததாகவும் அறிய முடிகிறது . அறிஞர் பெருமக்கள் கம்பருக்கு மகன் இருந்து அவன் சோழ மன்னனால் கொல்லப்பட்டான் என்பதற்கான ஆதாரங்களை, தரவுகளை, யூகங்களை கம்பராமாயணத்தின் வழி விளக்க முயற்சித்துள்ளனர்.  அதாவது ராமனை பிரிந்த தசரதனின் அழுகைக்கும், இந்திரஜித் மாண்ட போது ராவணின் அழுகைக்கும் இடையே நிரம்ப வித்தியாசம் காணப்படுகிறது.  ராவணன் அழும் போது கம்பனே ராவணணாக மாறி அழுவது போன்ற துன்பியல் உணர்வைக் காண முடிகின்றது என்பர். கல்லூரியில் நான் தமிழிலக்கியம் பயில ஆரம்பித்த தொடக்க காலத்தில் எம் ஊரான  "சுத்தமல்லி " யை சேர்ந்த திருச்சி தேசிய கல்லூரியில் இயற்பியல் பயின்ற, இன்றும் அதிமுக வில் பொறுப்பு வகிக்கும் என் உறவுமுறை மாமனான முருகன் அவர்கள் முதன் முதலில் அ