Skip to main content

Posts

Showing posts from 2016

காளமேகம்

காளமேகப் புலவரின் தனிப்பாடல் என்றாலே எப்போதும் எனக்கு தனியாத பெருவிருப்புண்டு. எனது கல்லூரி காலத்தில் தத்தனூர் கிளை நூலகம் என்னுள்  இருந்த புத்தக பசியை போக்கி,  புதிய பாதையை எனக்கு அமைத்துக் கொடுத்தது.  அங்குதான் காளமேகப் புலவரோடு எனக்கு அறிமுகம் கிடைத்தது கம்பனின் தனிப்பாடல்கள் நிறைய கிடைத்தன.  அந்த வகையில் தமிழில் குறிப்பிட்ட ஒரே வர்க்க எழுத்தை வைத்து அவர் எழுதிய  பாடல் மிகவும் ரசனைமிக்கது . அந்த பாடலை ஒரு முறை வாய்விட்டு உரக்க வாசித்து பாருங்கள் நாக்கும், பற்களும் நன்றாக நாட்டியம் ஆடுவது போல இருக்கும்.  இதோ அப்பாடல். தத்தித்தா தூதுதி தாதூதித் தத்துதி துத்தித் துதைதி துதைதத்தா தூதுதி தித்தித்த தித்தித்த தாதெது தித்தித்த தெத்தாதோ தித்தித்த தாது? உரத்துப் படிக்கும்போது பேசும் சக்தியற்ற ஊமை மனிதன் பிதற்றுவது போல இருக்கும். தகர வரிசை எழுத்துக்களை கண்டவிதமாக அடுக்கி எழுதிவைத்துள்ளது போல தோன்றும். ஆனால் ஆழ்ந்து படித்துக் கருத்தை அறியும்போது காளமேகப்புலவரின் திறமையை மட்டுமல்ல, தமிழ்மொழியின் வலிமையையும் எண்ணி எண்ணி இறும்பூதடையாமல் இருக்க முடியாது. வண்டொன்றைப் பார்த்துப் பாடுவ

கம்பன்

அனைவருக்கும் வணக்கம். நிற்க,  கவிச்சக்ரவர்த்தி,  நம் பாட்டன் கம்பனுடைய  ராமகாதையில் வாலி வதைப் படலத்தில்,இராமன் மறைந்து நின்று வாலி மீது அம்பெய்தி,வாலி வீழ்கிறான். தன் நெஞ்சில் தைத்த வாளியை (அம்பு)  எடுத்துப் பார்க்கிறான் வாலி . அந்த அம்பில் இராமன் என்ற பெயரைப் பார்க்கிறான், பின்வருமாறு கம்பன் தன் பாடலில் கூறுவான் மும்மை சால் உலகுக்கு எல்லாம்     மூல மந்திரத்தை, முற்றும் தம்மையே தமர்க்கு நல்கும்     தனிப் பெரும் பதத்தை, தானே இம்மையே எழுமை நோய்க்கும்     மருந்தினை, ‘இராமன் ‘என்னும் செம்மை சேர் நாமம் தன்னைக்     கண்களின் தெரியக்  கண்டான்.            மூன்று என்னும் தொகை பொருந்திய (வானம், பூமி, பாதாளம்) என்னும் உலகங்கள் யாவற்றிற்கும் ,ஆதாரமாய்ப் பொருந்திய மந்திரத்தை , முழுவதுமாகத் தம்மையை வழிபடும் அடியார்கட்கு அளிக்கும்,  ஒப்பற்ற சிறப்பு மிக்க சொல்லை , தான் தனித்தே இந்தப் பிறவியிலேயே , எழுவகைப் பிறப்புக்களாகிய நோய் வராமல் தடுக்கும் மருந்தை; இராமன் என்கின்ற ,  சிறப்புப் பொருந்திய திருநாமத்தை;  தன் கண்களினால் (அவ்வம்பில்) தெளிவாகப்  பார்த்தான். அதன் பிறகு வாலிக்கும

தம் பதியில் கலங்கிய மீன்

என்னவளே ! இரவில் தெருவில் நடக்காதே உன் முகத்தை நிலவென்று நினைத்து விண்மீன்கள் தரைக்கு வந்து விடப்போகின்றன . அன்புடன் : சுரேஷ்மணியன். 
சங்க காலத்தில் தான் விளையாடிய போது தவறி புதையுண்ட விதை செடியாக வளர்வதை  கண்ட பெண்ணொருத்தி அதற்கு நீரும் பாலும் இட்டு வளர்த்தாளாம்  வயது முதிர்ந்த பிறகு தன் கட்டழகு காதலனோடு அந்த மரத்தின் அருகே சந்திக்கிறாள்,  காதலன் அவளிடம் காதல் வார்த்தை பேசுகிறான் வெட்கப்பட்டுக்கொண்டே அந்த பெண் சொன்னாளாம் இங்கே என் அக்கா இருக்கிறாள் என்றாள் வாருங்கள் வேறிடம் செல்வோம் என்கிறாள் காதலன் பதட்டத்தோடு எங்கே உன் அக்கா ?  என்றான் அவள் கை நீட்டி தான் வளர்த்த மரத்தை காண்பித்தாளாம். இறைவா அந்த பெண் கைகாட்டிய மரமாக இந்த மரம் இருக்க வேண்டாம் விளையாடு ஆயமொடு வெண் மணல் அழுத்தி மறந்தனம் துறந்த காழ் முளை அகைய நெய் பெய் தீம் பால் பெய்து இனிது வளர்ப்ப நும்மினும் சிறந்தது நுவ்வை ஆகும் என்று அன்னை கூறினள் புன்னையது நலனே அம்ம நாணுதும் நும்மொடு நகையே விருந்தின் பாணர் விளர் இசை கடுப்ப வலம்புரி வான் கோடு நரலும் இலங்கு நீர்த் துறை கெழு கொண்க நீ நல்கின் இறைபடு நீழல் பிறவுமார் உளவே 172 நெய்தல்   ( ஜெயங்கொண்டம் To அரியலூர் சாலையில் காட்டுபிரிங்கியத்தில் சாலை விரிவாக்கத்திற்காக மூதாதையர் நட்டு வளர்த்த மரங்களை

சிரிப்பு

முகநூலில் படித்ததில் பிடித்தது சிரிக்க மட்டும்.. ஒரு நாள் திடீரென்று ரயில்வே நிலயத்தில் மூன்றாவது பிளாட்பாரத்தில் நின்று கொண்டிருந்த ஐம்பது பேர் இரயிலில் அடிபட்டு இறந்து விட்டனர்! அனைவருக்கும் ஒரே ஆச்சர்யம்... என்ன நடந்தது ? எதனால் அந்த ப்ளாட்பாரத்தில் நின்று கொண்டிருந்த அனைவரும் இறந்து விட்டனர் என்று! அந்த ப்ளாட்பாரத்தில் உயிர் பிழைத்து பரிதாபமாய் நின்று கொண்டிருந்த நாராயணசாமியை எல்லா பத்திரிகையாளர்களும் சூழ்ந்து கொண்டு என்ன நடந்தது? என்று ஆவலாக கேட்டனர். அதற்கு நாராயணசாமி "இரயில் வருவதற்கான அறிவிப்பில் நடந்த பிழையினால் அனைவரும் செத்து விட்டனர்" என்றார். "அப்படியென்ன தவறு" என்று நிருபர்கள் கேட்டதற்கு நாராயணசாமி சொன்னார். "எல்லோரும் டில்லி எக்ஸ்பிரஸ் ரயிலுக்காக மூன்றாவது ப்ளாட்பாரத்தில் நின்று கொண்டிருந்தனர், அப்போது அறிவிப்பாளர் "டில்லி எக்ஸ்பிரஸ் மூன்றாவது ப்ளாட்பாரத்தில் வந்து கொண்டிருக்கிறது " என்று அறிவித்தார். உடனே அனைவரும் ப்ளாட்பாரத்தில் இருந்து தண்டவாளத்தில் குதித்து விட்டனர். ரயில் அனைவரையும் அடித்து விட்டது " என்றார். உடனே
ரப்பர் மரத்திற்கு ரணங்கள் புதிதல்ல. ___ வைரமுத்து எத்தனை எத்தனையோ ! ஆரியப் புலிகளையும், சில தமிழ்நாட்டு துரோகப்புலிகளையும், சில பல வடநாட்டு புலிகளையும், கழகம் காத்திட சிறையில் பட்ட வலிகளையும், கழகத்தை தகர்க்க நினைத்த வைகோ போன்ற " சில அலி "களையும், அரசியலில் அவைகளோடு எதிர்த்து போராடி வெற்றிக்கண்ட எம் தலைவனை  இந்த " நெஞ்சு சளி " யால் என்ன செய்து விட முடியும். " சென்னை வர்தா புயலில் எல்லா மரமும் சாய்ந்தன ஆனால் இந்த கட்டுமரம் மட்டும் சாயவில்லையே ! என பதிவிட்டு ஏங்கிய நாய்களே ! நாய்களே ! அவர் வீட்டு முருங்கைமரத்தை கூட அந்த "வளி "யால் ( வளி _ காற்று)   வீழ்த்த முடியவில்லை போயும் ,போயும், ச்சீசீசீ இந்த "சளி "யா என் தலைவனை வீழ்த்த போகிறது. வீணர்களே ! கலைஞர் எனும் " பாகுபலி"க்கு முன்னால் இந்த "சளி" எம்மாத்திரம். மனப்பால் குடிக்காதீர் மாற்றுக்கட்சியீர் ? ஏனெனில் அவர் உங்களுக்கும் மலர்வளையம் வைத்துவிடுவார். வீதியோரத்திலே ! வேலையற்றதுகள் அந்த வேலையற்றதுகளின் உள்ளத்திலே விபரீத எண்ணங்கள் ___ அற
தமிழ் என்ற சொல்லை நாம் உச்சரிக்கும் போது எத்தைகய இனிமை இருக்கிறதோ, அது போல "கம்பர் " என்ற சொல்லை உச்சரிக்கும் போது ஒரு இனம் புரியாத மகிழ்ச்சியும்,  இறுமாப்பும் எனக்கு ஏற்படுவது உண்டு. அதிலும் தமிழ் கடல் நெல்லை கண்ணன் ஐயா அவர்கள் கம்பனை அவன் பாடல்களை  விளக்கும் போது மனம் குதூகளிக்கும் . கண்ணதாசன் உள்ளிட்ட பல கவிஞர்களின் எழுத்து வண்டி ஓடியதே,   கம்பனின் கவிதைகளை  அதன் சாரத்தை  அவர்கள் கடன் வாங்கிக் கொண்டதால்தான். இது முற்றிலும் உண்மை,  அதை கவியரசு கண்ணதாசனே கூறியிருக்கின்றார். சரி விடயத்திற்கு வருகிறேன் புலவர்களின் பாடக்கருத்தை விளக்கும் உரைகளான தெளிவுரை,  நயவுரை,  பொழிப்புரை என்பன போன்றவைகள் புலவன் கூறவந்த உண்மையான கருத்தை படிப்போருக்கு விளக்குகிறதா ?  என்றால்  ஆம் என்று நிச்சயம் கூறிவிட முடியாது.  ஏனெனில் யானையை தடவி பார்த்த  குருடர்களின் கதை போன்று  யானையின் வாலை பிடித்து பார்த்த குருடன் யானை என்பது மெல்லியதாக நீட்டமாக இருக்கும் என்றும்,  மற்ற ஒரு குருடன் யானையின் காலை பிடித்து பார்த்து யானை என்பது தடிமனாக உரல்கட்டை போன்று இருக்கும் என்று  விளக்கினார்களோ  அதுபோல பல உரைய
இந்த படத்தை பார்க்கும்போது நம்முள் ஒரு மன நெகிழ் நிச்சயமாய் வரும். அதே சமயம் இதனை பார்க்கும் போது ஒரு சுவையான இலக்கிய நயமான செய்தி நினைவுக்கு வருகிறது . அன்றாடம் நம் வீட்டில் பால் காய்ச்சும் போது அடுப்பை பற்ற வைத்து பானையில் பாலை ஊற்றி அதனோடு சிறிதளவு நீரையும் சேர்த்து பாலை காய்ச்சுகிறோம். ஏனெனில் வெறுமனே பாலை காய்ச்சி பருக முடியாது , ஏனெனில் அதனை பருகினால் நமக்கு செறிமானமும் ஆகாது , அப்போது நாம் பாலில் ஊற்றிய அந்த நீரை தன் நண்பனாக பால் ஏற்றுக்கொண்டு நட்பு பாராட்டி மகிழ்கிறது. அடுப்பில் வெப்பம் அதிகரிக்க அதிகரிக்க பாலில் உள்ள நீரானது ஆவியாகி பானையை விட்டு வெளியேறும் போது, பாலானது அய்யோ ! என் நண்பன் என்னை விட்டு போகின்றானே என்று , நண்பா ! என்னை விட்டு போகாதே என்று தன் நண்பனை பிடிக்க பானையின் மேலே நோக்கி பொங்கி வருகிறது. பால் பொங்கி வருவதை பார்த்து நாம்  சிறிதளவு நீரை தெளித்ததும் ,அந்த பாலானது ஆகா!   என் நண்பன் மீண்டும் வந்து விட்டான் என்று பால் ஆசுவாசப்படுகிறதாம் . மீண்டும் அடுப்பில் உள்ள நெருப்பானது வெப்பத்தை  அதிகரிக்க, மீண்டும் நீர் ஆவியாகி வெளியேற, இதனை கண்ட  பாலானது ஏய்

பார " தீ "

மற்றைய பாடவேளை வகுப்புகளை விட தமிழ் வகுப்பு என்பது மாணவர்களுக்கு சற்று சுதந்திரமானதும், இனிமையான வகுப்பும் கூட ( இலக்கணம் நடத்தாத வரை,  கேள்விகள் கேட்காத வரை மட்டுமே )  . என்னுடைய பள்ளி நாட்களில் எங்கள் ஊரான  சுத்தமல்லி உயர்நிலை பள்ளியில் திருபுரந்தானில் இருந்து ராமச்சந்திரன் என்ற தமிழ் ஐயா எங்களுக்கு தமிழாசிரியர், மதிய உணவுக்கு பின் முதல் பாடவேளை தமிழ்,  உண்ட மயக்கம் தொண்டனுக்கும் உண்டு என்பதை போல் அரை தூக்கத்தில் கிரங்கிப்போயிருக்கும்  வேளையில் வகுப்பினுள் அவர்  நுழைவார்,  பாடம் நடத்தி முடித்து அவர் கிளம்பும் நேரத்தில் எல்லோரும் திடீரென அரை தூக்கத்தை விட்டு எழுந்து " நன்றி அய்யா " என்போம், அதில் என்னை போன்ற பாதி பேர் " பன்றி அய்யா " என்று கூட்டத்தோடு கோரசாக சொல்வோம், பக்கத்தில் உள்ளவன்லாம் நம்மளத்தான் பார்ப்பான். இப்படியே தா.பழூர் மேல்நிலைப்பள்ளியில்  பன்னிரண்டாம் வகுப்பில்  ஒரு நாள் பாரதியாரின் மனைவி பெயர் என்ன?  என்று பக்கத்து பெஞ்ச் நண்பனை கேட்டார் எங்கள் தமிழ் அய்யா.  அவனோ பாரதியாரின் மனைவி பெயர் தேவயானி என்றான்.  வகுப்பறையோ கொள்ளென்று சிரித்தது, ஏனெனில்